எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ள நிலையில், பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். குறிப்பாக கிட்டத்தட்ட 50% ஊழியர்கள் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏராளமான விளம்பரதாரர்கள் ட்விட்டரில் விளம்பரம் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். இதனால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகின்றது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

விளம்பரங்களுக்கு தடை
வோல்க்ஸ்வேகன் ஏஜி, ஜெனரல் மோட்டார்ஸ், பைசர் இன்க், யுனைடெட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும் ஏற்கனவே தங்களது விளம்பரங்களை ட்விட்டரில் நிறுத்தி விட்டன.

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தினை கையக்கப்படுத்தியதை தொடர்ந்து ட்விட்டரில் விளம்பரம் கொடுப்பதை தொடர வேண்டுமா? இதற்காக செலவழிக்க வேண்டுமா? என்ற அச்சத்தில் உள்ளன. இதுவே அவர்களை தற்காலிகமாக விளம்பரங்களை தடையை செய்ய வழிவகுத்திருக்கலாம்.

இவசமாக மாற்ற முடியாது?

எனினும் விளம்பரதாரர்களின் நடவடிக்கையானது எலான் மஸ்கினை இத்தகைய கட்டுபாடுகளை எடுக்க தூண்டியிருக்கலாம். ட்விட்டரை கையகப்படுத்திய கையோடு, விளம்பரதாரர்களுக்கும் சாதகமான ஒரு அறிவிப்பினை எலான் மஸ்க் வெளியிட்டார்.

ட்விட்டரை யாருக்கும் இலவச காட்சியாக மாற்ற அனுமதிக்க மாட்டேன். . இது மேற்கொண்டு வன்முறைக்கு எதிரான அதன் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கலாம் என தெரிகிறது.

விளம்பரதாரர்களுக்கு ஆதரவு

மேலும் ட்விட்டர் இனி விளம்பரதாரர்கள் பிராண்டை வலுப்படுத்தும், விளம்பரதாரர் நிறுவனத்தை வளர்க்கும் உலகின் மிகவும் மரியாதைக்குரிய விளம்பரதளமாக இருக்க விரும்புவதாகவும் கூறியிருந்தார். மேலும் தங்களது நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த அனைவருக்கும், நான் கூறிக்கொள்வதாகவும், இனியும் இணைந்து பணியாற்றவும் அழைப்பு விடுத்திருந்தார்.

வேறு வழியில்லை

இதற்கிடையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மஸ்க் முதல் முறையாக பணி நீக்க நடவடிக்கைகளுக்கு பிறகு, நாளொன்றுக்கு 4 மில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்புகளை கண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் எனக்கு வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

யாரெல்லாம் பணி நீக்கம்

எலான் மஸ்கின் இந்த பணி நீக்கத்தில் பொறியியல், கம்யூனிகேஷன்ஸ் , பொருட்கள், கன்டென்ட் க்யூரேஷன் மற்றும் மெஷின் லேர்னிங் உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், இந்த பணி நீக்கத்தால் பெரும்பகுதி பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

மனித உரிமைக் குழு

ட்விட்டரின் மனித உரிமைகளின் செயல் தலைவராக இருந்த ஷானன் ராஜ் சிங், நிறுவனத்தில் உள்ள முழு மனித உரிமைக் குழுவும் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் ட்வீட் செய்திருந்தார்.

இந்தியாவிலும் மார்கெட்டிங் பிரிவு மற்றும் ஐடி துறையில் உள்ள குழுக்களும் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது..

இது மட்டும் அல்ல இன்னும் பல முக்கிய அதிகாரிகள், உயர் அதிகாரிகள், பல துறை சார்ந்த ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 50% பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version