இளம்பெண் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா சிட்டினியில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மென்களில் ஒருவர் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒரு நாள் போட்டிகளிலும், 46 டி-20 போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

நடப்பு டி-20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றவர், இலங்கை அணியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால், தொடரின் இடையே ஏற்பட்ட காயம் காரணமாக, தொடரிலிருந்து விலகினார்.

இவருக்கு பதிலாக இலங்கை அணியில் பண்டார சேர்க்கப்பட்டார். காயமடைந்தாலும், அவர் இலங்கைக்கு திரும்பாமல் அணியுடனே இருந்தார்.

இந்த நிலையில், நேற்று சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது.

இந்த போட்டிக்குப் பின்னர், இலங்கை அணியின் தனுஷ்கா குணதிலகா சிட்னி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

தனுஷ்கா குணதிலகா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருப்பதாக சிட்டி காவல்துறை தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, தனுஷ்கா குணதிலகா இல்லாமலேயே இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்பியிருக்கின்றனர். இலங்கை கிரிக்கெட் வீரர் பாலியல் புகாரில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் விவகாரம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version