மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் நோய் காரணமாக தினமும் 10 மாடுகள் வீதம் சுமார் 800 மேற்பட்ட மாடுகள் வயல்வெளி, குளம் மற்றும் காட்டை அண்டிய பகுதிகளான மேச்சல் தரை பகுதிகளில் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீடக்கப்பட்தாக கால் நடைவளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.
சித்தாண்டி மற்றும் கிரான் கால்நடை திணைக்களப் பிரிவுகளான சந்தனமடு ஆற்றுப்பகுதியை அண்டிய பகுதியான சித்தாண்டி 4ஆம் பிரிவு, ஈரளக்குளம், ஆலையடி, சேரடி, வேறம் பெரியவெட்டை, மற்றும் வட்டுவான், வெள்ளா மைச்சேனை, கூளாவடி, கோரவெளி, மாதந்தனை, மயிலந்தனை மேச்சல் தரை போன்ற பிரதேசங்களில் ஒரு வயது தொடக்கம் ஒன்றரை வயது வரையிலானதும் கர்ப்பிணி மாடுகள், எருமை மாடுகள் மற்றும் பசுமாடுகளும் நோய் தாக்கத்தினால் உயிரிழந்து வருகின்றன.
இவ்வாறு தடுப்பூசிகள் ஏற்றிய பின்னரும் மாடுகள் வாயால் நுரை வெளியேறி மூக்கால் சுவாசிக்க முடியாது இறந்து வருவதாகவும் சுமார் இருவாரங்களில் 800 க்கு மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு மாடுகள் உயிரிழப்பதால் தாம் பலத்த நஷ்டம் அடைந்துள்ளதாகவும் முதலில் உயிருடன் இருக்கின்ற மாடுகளை காப்பற்ற அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட மாடு வளர்ப்போருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கவேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.