மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினரால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(6) காலை சிரமதான பணிகள் இடம் பெற்றது.
எனினும் அங்கு சென்ற அடம்பன் காவல்துறையினா் சிரமதானம் மேற்கொண்டமை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தோடு, மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(6) காலை சிரமதான பணிகள் இடம் பெற்றது.
-இந்த நிலையில் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(6) காலை சிரமதான பணிகள் இடம் பெற்றது.குறித்த சிரமதான நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.