ஷ்ரத்தாவை அப்தாப் அமீன் பூனாவாலா 35 துண்டுகளாக வெட்டிய போது வீடு முழுவதும் ரத்தம் சிதறியது.

தரை முழுக்க ரத்த ஆறாக ஓடியது. அந்த ரத்தக் கறைகளை எப்படி துடைத்து சுத்தம் செய்வது என்று அப்தாப்புக்கு தெரியவில்லை.

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவரின் மகள் ஷ்ரத்தா (வயது 26).

மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் இவர் வேலை பார்த்து வந்தார். அப்போது உடன் வேலை பார்த்த அப்தாப் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் மலர்ந்தது.

அந்த காதலை ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்த்தனர். அதையடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் காதல் ஜோடி டெல்லிக்கு இடம் மாறியது.

அங்கு மெக்ருலி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினர்.

இதற்கிடையே மும்பையில் உள்ள பெற்றோருடனும் ஷ்ரத்தா தொடர்ந்து பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 18-ந் தேதிக்கு பிறகு ஷ்ரத்தாவை அவருடைய பெற்றோரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அப்தாப் அமீன் பூனாவாலா கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் அப்தாப் அமீன் பூனாவாலா தனது காதலி ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்திருப்பது தெரியவந்தது.

அந்த உடல் பாகங்களை அவர் புதிதாக பிரிட்ஜ் வாங்கி பதப்படுத்தி வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஷ்ரத்தா உடல் பாகங்களை அவர் 18 நாட்கள் அந்த பிரிட்ஜில் வைத்திருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துண்டுகளாக வெளியில் வீசியுள்ளார்.

அமெரிக்க கிரைம் படமான டெக்ஸ்டர் படத்தை பார்த்து அப்தாப் அமீன் பூனாவாலா இந்த கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

ஷ்ரத்தாவை அப்தாப் அமீன் பூனாவாலா 35 துண்டுகளாக வெட்டிய போது வீடு முழுவதும் ரத்தம் சிதறியது.

தரை முழுக்க ரத்த ஆறாக ஓடியது. அந்த ரத்தக் கறைகளை எப்படி துடைத்து சுத்தம் செய்வது என்று அப்தாப்புக்கு தெரியவில்லை.

இதனால் கூகுளில் அவன் இதற்கு விடை தேடினான். தரையில் படிந்த ரத்தக் கறைகளை சுவடு தெரியாமல் எப்படி சுத்தம் செய்வது என்று அவன் கூகுளில் ஆய்வு செய்துள்ளான்.

அப்போது சில ரசாயன பொருட்களை பயன்படுத்தினால் ரத்த கறைகளை முழுமையாக நீக்கலாம் என்று அவனுக்கு தெரியவந்துள்ளது.

அதன்படி அவன் அந்த ரசாயான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வந்து வீட்டை சுத்தம் செய்திருக்கிறான்.

ரத்தக் கறைகள் படிந்த சட்டையையும் அவன் கூகுளில் ஆராய்ச்சி செய்துதான் சுத்தம் செய்திருக்கிறான்.

அப்தாப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் வீசப்பட்ட பகுதிகளில் டெல்லி போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

அந்த இடங்களில் இருந்து சில எலும்பு துண்டுகள்தான் கிடைத்தன. கடந்த மே மாதமே ஷ்ரத்தா உடல் பாகங்கள் வெட்டி வீசப்பட்டு விட்டதால் அவை மண்ணோடு மண்ணாக போயிருக்கும் என்று போலீசார் கருதுகிறார்ள்.

எனவே ஷ்ரத்தா உடல் பாகங்கள் கிடைக்காது என்று கூறப்படுகிறது. அதுபோல ஷ்ரத்தா உடலை 35 துண்டுகளாக வெட்டுவதற்கு அப்தாப் பயன்படுத்திய சமையல் அறை கத்தியும் கிடைக்கவில்லை.

என்றாலும், இந்த வழக்கில் துப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டெல்லி போலீசார் அப்தாப்பை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

முதல்கட்ட விசாரணையில் ஷ்ரத்தாவின் சமூக வலைதள தொடர்புகள் அனைத்தையும் அப்தாப் கடந்த சில மாதங்கள் வரை இயக்கி வந்தது தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version