யுக்ரேன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தங்களில் அதிபர் புதின் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
போருக்கு செலவழிக்கும் ரஷ்யாவின் திறனைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்துப் பரிசீலித்து வருகின்றன.
யுக்ரேனின் கிழக்கிலுள்ள லுஹான்ஸ்க், டோனியெட்ஸ்க் மற்றும் தெற்கிலுள்ள ஸப்போரீஷியா, கெர்சோன் ஆகிய பகுதிகளை தங்களுடன் இணைத்துக்கொண்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
என்ன பொருளாதாரத் தடைகள்?
ஒரு நாடு, அத்துமீறி செயல்படுவதைத் தடுக்கவோ அல்லது சர்வதேச சட்டத்தை மீறுவதைத் தடுக்கவோ, மற்ற நாடுகளால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளே பொருளாதாரத் தடைகள்.
போருக்குச் செல்வது போக, உலக நாடுகள் எடுக்கக்கூடிய கடுமையான நடவடிக்கைகளில் இவையும் அடங்கும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் என்ன?
யுக்ரேனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் வகையில் சுய பாணியிலான வாக்கெடுப்பை நடத்தியதற்காக ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 278 பேர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும் அதன் பாதுகாப்புத் துறையோடு தொடர்புடைய 14 பேரையும் குறி வைத்துள்ளது.
பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்து வருகின்றன.
பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்து வருகின்றன
ரஷ்யாவிற்கு வெளியிலும் அதன் ராணுவத்தையோ அல்லது யுக்ரேனிய பிரதேசங்களை அதனுடன் இணைத்துக் கொள்வதையோ ஆதரிக்கும் அமைப்புகளையும் குறி வைப்பதாக அமெரிக்கா கூறுகிறது.
ஐரோப்பிய ஆணையம் உருவாக்கப்பட்ட புதிய சுற்று தடைகள், உயர் தொழில்நுட்ப பொருட்கள் உட்பட அதிகமான பொருட்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதிலிருந்து தடை செய்யவும் ரஷ்ய இறக்குமதிகளுக்கு மேலும் தடை விதிக்கவும் முன்மொழிகிறது.
ரஷ்யா மீது என்ன தடைகள் விதிக்கப்பட்டுள்ளன?
நிதி நடவடிக்கைகள்
• மேற்கத்திய நாடுகள் ரஷ்யா வெளிநாடுகளில் வைத்திருக்கும் பணத்தைக் கையாளுவதைக் கட்டுப்படுத்த முயல்கின்றன.
• அமெரிக்க வங்கிகளில் உள்ள வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி ரஷ்யா கடனைச் செலுத்த அமெரிக்கா தடை விதித்துள்ளது.
• சர்வதேச நிதிச் செய்தியிடல் கட்டமைப்பான ஸ்விஃப்டில் (SWIFT) இருந்து முதன்மையான ரஷ்ய வங்கிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், ரஷ்யா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கான பணத்தைச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
• பிரிட்டன் நிதி அமைப்பிலிருந்து முதன்மை ரஷ்ய வங்கிகளை பிரிட்டன் விலக்கியுள்ளது. அனைத்து ரஷ்ய வங்கிகளின் சொத்துகளையும் முடக்கியது, ரஷ்ய நிறுவனங்கள் கடன் வாங்குவதைத் தடை செய்துள்ளது மற்றும் பிரிட்டன் வங்கிகளில் ரஷ்யர்கள் செய்யக்கூடிய வைப்புகளுக்கு வரம்புகளை விதித்துள்ளது.
அரசுக்கு சொந்தமான ஸ்பெர் வங்கி ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று
அரசுக்கு சொந்தமான ஸ்பெர் வங்கி ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று
எண்ணெய் மற்றும் எரிவாயு
• ஐரோப்பிய ஒன்றியம் டிசம்பர் மாதம் முதல் கடல் வழியாகக் கொண்டுவரப்படும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்யும்.
♠ பிப்ரவரி 2023இல் ரஷ்யாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்ப் பொருட்களின் அனைத்து இறக்குமதிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்யும்.
♥ரஷ்யாவின் அனைத்து எண்ணெய், எரிவாயு இறக்குமதிகளையும் அமெரிக்கா தடை செய்கிறது.
♥ பிரிட்டன் 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும். இனி ரஷ்ய எரிவாயுவை இறக்குமதி செய்யாது.
♥ ரஷ்யாவில் இருந்து நார்ட்ஸ்ட்ரீம்-2 எரிவாயு குழாய் திறப்பதற்கான திட்டங்களை ஜெர்மனி முடக்கியுள்ளது.
♥ ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய நிலக்கரியை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது.
♥ டிசம்பரில் இருந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி7 ஆகிய கூட்டமைப்புகள் ரஷ்ய எண்ணெய்க்காக நாடுகள் செலுத்தும் விலையைக் கட்டுப்படுத்த விரும்புகின்றன.
♥ மேற்கத்திய காப்பீட்டு நிறுவனங்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களிடம் வரம்புக்கு மேல் செலுத்தினால் எண்ணெய் ஏற்றுமதியை ஈடு செய்யாது எனத் தெரிவித்துள்ளது.
♥ ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எரிவாயு மீது தடைகளை விதிக்கவில்லை. ஏனெனில், அது அதன் 40% எரிவாயு தேவைகளுக்கு ரஷ்ய எரிவாயுவை நம்பியுள்ளது.
செல்சீ கால்பந்து கிளப்பின் முன்னாள் உரிமையாளர் ரோமன் அப்ரமோவிச்
தனிநபர்களைக் குறிவைக்கும் தடைகள்
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்று பிற நாடுகள், தன்னலக் குழுக்கள் என்று அழைக்கப்படுபவை உட்பட 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு தடைகளை விதித்துள்ளன.
♥ இவர்கள் ரஷ்ய அதிபர் மாளிகைக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்படும் செல்வந்த வணிகத் தலைவர்கள், செல்சீ கால்பந்து கிளப்பின் முன்னாள் உரிமையாளர் ரோமன் அப்ரமோவிச் போன்றவர்கள்.
♥ அதிபர் புதின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோஃப் ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் கனடாவில் முடக்கப்பட்டுள்ளன.
♥ தடை விதிப்புகளுக்கு உள்ளான ரஷ்யர்களோடு தொடர்புடைய சூப்பர் யாட்ச்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
♥ நியூயார்க்கில், ரஷ்ய அலுமினிய உற்பத்தியாளர் ஒலெக் டெரிபாஸ்கா, அமெரிக்கா விதித்த தடைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
♥ “கோல்டன் விசாக்கள்” விநியோகிப்பதை பிரிட்டன் நிறுத்தியுள்ளது. இந்த விசாக்கள் பணக்கார ரஷ்யர்கள் பிரிட்டிஷ் வாழ் உரிமைகளைப் பெற அனுமதித்தது.
ரஷ்யாவில் இருந்து நார்ட்ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் திறப்பதற்கான திட்டங்களை ஜெர்மனி முடக்கியுள்ளது
பொருட்கள் மற்றும் சேவைகள் மீது வேறு என்ன தடைகள் விதிக்கப்பட்டுள்ளன?
♥ பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்றவற்றின் இருமுறை உபயோகப் பொருட்களான வாகன பாகங்கள் போன்ற குடிமை மற்றும் ராணுவ நோக்கம் கொண்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குத் தடை.
♥ அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடிய வான்வெளியில் பறக்க அனைத்து ரஷ்ய விமானங்களுக்கும் தடை.
♥ ரஷ்ய தங்கம் இறக்குமதி செய்யத் தடை.
♥ ரஷ்யாவிற்கு ஆடம்பர பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை.
♥ வோட்கா உட்பட சிலவற்றின் இறக்குமதிகளுக்கு பிரிட்டன் 35% வரி விதித்துள்ளது.
♥ பல சர்வதேச நிறுவனங்கள் ரஷ்யாவில் வர்த்தகத்தை நிறுத்திவிட்டன.
பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவை பாதிக்கிறதா?
போருக்குச் செலவழிக்கும் ரஷ்யாவின் திறன் அதிக எண்ணெய், எரிவாயு விலைகளைச் சார்ந்திருந்தது.
ஆராய்ச்சி நிறுவனமான ஆர்கஸ் மீடியாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் டேவிட் ஃபைஃபை, அதன் கச்சா எண்ணெய் வருவாய் கடந்த ஆண்டில் 41% உயர்ந்துள்ளதாகக் கூறுகிறார்.
“ரஷ்யாவின் மொத்த ஏற்றுமதியில் எண்ணெய் விற்பனை 40%. எனவே அவை போருக்கு நிதியளிக்கப் பெரிதும் உதவுகின்றன.
இருப்பினும், குறிப்பாக ராணுவத் துறைக்குத் தேவையான உயர் தொழில்நுட்ப கூறுகளுக்கான அணுகலைத் தடுப்பதன் மூலம், பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவை வேறு வழிகளில் பலவீனப்படுத்துகின்றன.
ரஷ்யாவின் எதிர்வினை என்ன?
தொலைத்தொடர்பு, மருத்துவம், வாகனம், வேளாண்மை, மின் உபகரணங்கள் மற்றும் மரப் பொருட்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை ரஷ்யா தடை செய்துள்ளது.
இது வெளிநாட்டு அரசாங்க பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு வட்டி செலுத்துவதைத் தடுக்கிறது. மேலும் ரஷ்ய நிறுவனங்கள் வெளிநாட்டு பங்குதாரர்களுக்குப் பணம் செலுத்துவதைத் தடை செய்கிறது.
பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ரஷ்ய முதலீடுகளை வைத்திருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அந்தப் பங்குகளை விற்பதை நிறுத்தியுள்ளது.