ஒன்லைன் வர்த்தகத் தளமான ebay-ல் இலங்கை மதிப்பில் சுமார் 20.34 கோடி ரூபாய்க்கு பீர் போத்தலொன்று ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

140 ஆண்டுகளுக்கு முன்னர் ஜான் பிராங்கிளின் என்பவர் அவருடைய குழுவினர் 129 பேருடன் இணைந்து ஆர்டிக் பகுதிக்குச் சென்றுள்ளார்.

எனினும் எதிர்பாராத விதமாக அவர்கள் பயணித்த கப்பல் விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அக்கப்பலில் பயணித்தவர்களைச் தேடிச் சென்ற சர். எட்வர்ட் என்பவரால் அவர்கள் பயன்படுத்திய பீர் போத்தல் ஒன்றை மாத்திரமே கண்டுபிடிக்கக் கூடியதாக இருந்துள்ளது.

இந்நிலையில் சுமார் 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த குறித்த பீர் போத்தலானது அண்மையில் 20.34 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version