தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது.

வல்வெட்டித்துறையில், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பூர்வீக வீட்டின் முன்பாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கொண்டாடப்பட்டது.

இதன் போது பொதுமக்களுக்கு எள்ளுருண்டைகள் மற்றும் இனிப்புகள் வழங்கிவைக்கப்பட்ட அதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டது.

அத்துடன் நல்லூர் ஆலய முன்றலில் யாசகர் ஒருவர் ஆலய வழிப்பாட்டிற்கு வருகை தந்தவர்களுக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புக்களை வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version