2021ஆம் ஆண்டின் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் இருந்து 16 ஆயிரத்து 564 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையிலேயே 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரத்தில் சித்தியை பெற்றுள்ளனர்.
இதில் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 3 ஆயிரத்து 9 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் 193 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரத்தில் சித்தியடைந்துள்ளனர்.
வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 56 பேருக்குக்கும், வடமராட்சி கல்வி வலயத்தில் 56 பேருக்கும், வலிகாமம் கல்வி வலயத்தில் 53 பேருக்கும், கிளிநொச்சி கல்வி வலயத்தில் 49 பேருக்கும்,முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 47 பேருக்கும், மன்னார் கல்வி வலயத்தில் 39 பேருக்கும், தென்மராட்சி கல்வி வலயத்தில் 36 பேருக்கும், வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 12 பேருக்கும் துணுக்காய் கல்வி வலயத்தில் 9 பேருக்கும் தீவக கல்வி வலயத்தில் ஒருவருக்கும் 9 ஏ சித்தி கிடைத்துள்ளது.