யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை உடன் அகற்றுமாறு கோரி, அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலட்டை பண்ணைகளை அகற்றும் வரை தமது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள அனலைதீவு கடற்றொழிலாளர்கள், புதன்கிழமை (30) முதல் கடற்றொழில் செயற்பாடுகளைப் புறக்கணித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version