ஒட்டுமொத்த உலகமே கால்பந்து உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டி குறித்து தான் தற்போது வரை பேசிக் கொண்டிருக்கிறது.

 

இதற்கு காரணம், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கால்பந்து உலக கோப்பைத் தொடரை வென்றது தான். பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்தது.

மேலும், இரு அணிகளும் கத்தாரில் மோதிய இறுதி போட்டி, ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பை எகிற வைக்கும் வகையில் தான் சென்று கொண்டிருந்தது.

முதல் பாதியில், அர்ஜென்டினா அணி இரண்டு கோல்கள் அடிக்க இரண்டாவது பாதியில் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி அளித்திருந்தார்.

இதனால், இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்க யார் வெற்றி பெறுவார்கள் என்று விறுவிறுப்பு கடைசி நிமிடம் வரை நீடித்திருந்தது. 3 – 3 என்ற கணக்கில் கோல்கள் சமனாக, பெனால்டி சூட்அவுட் நடைபெற்றது.

இதில் அர்ஜென்டினா அணி 4 – 2 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலக கோப்பையையும் தற்போது சொந்தமாக்கி உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த சமயத்தில் அந்த அணியின் நட்சத்திர வீரராக இருந்த மெஸ்ஸி, அதிக கோல்கள் அடித்து அசித்தி இருந்தார்.

ஆனால் உலக கோப்பை கை கூடாத விஷயம், அவரை அதிக வேதனையில் ஆழ்த்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நிச்சயம் அர்ஜென்டினா அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அதே போல இறுதிப்போட்டி வரை முன்னேறி தற்போது பிரான்ஸ் அணி வீழ்த்தி மூன்றாவது முறையாக அர்ஜென்டினா அணி கால்பந்து உலக கோப்பையை கைப்பற்றி உள்ளது.

கால்பந்து உலகின் சிறந்த வீரரான மெஸ்ஸிக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இத்தனை நாட்களாக சிறந்த வீரர் என பெயர் பெற்ற போதும் உலக கோப்பை கால்பந்து தொடரை அவர் வெல்லாமல் இருந்தார். அப்படி ஒரு சூழலில், தற்போது அதனை வென்று சாதித்துள்ளார் மெஸ்ஸி.

இந்த நிலையில், மைதானத்தில் மெஸ்ஸியின் தாயார் செய்த விஷயம் தொடர்பான வீடியோ, பலரையும் மனம் கலங்க வைத்துள்ளது.

அர்ஜென்டினா வெற்றி பெற்றதையடுத்து, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது, மைதானத்தில் இருந்த மெஸ்ஸி, அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க, திடீரென அவர் பின்னால் வந்த அவரது தாயார் சிலியா மரியா மெஸ்ஸி, முதுகைத் தட்டி திருப்பினார். திரும்பி பார்த்த மெஸ்ஸி, தாய் நிற்பதை பார்த்ததும் மறுகணமே இன்ப அதிர்ச்சியில் அவரை கட்டியணைத்ததுடன் தாயுடன் சேர்ந்து மகிழ்ச்சியை ஆனந்த கண்ணீருடன் கொண்டாடினார்.

மெஸ்ஸியின் வெற்றியை அவரது தாயாரும் கொண்டாடியது தொடர்பான வீடியோ, தற்போது அர்ஜென்டினா கால்பந்து ரசிகர்களை மனம் உருக வைத்து வருகிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version