♠ ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சாம் கர்ரன்

♠ இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லியை ரூ.1.9 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

கொச்சி: 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது.

முன்னணி வீரர்களை வாங்குவதற்கு அணிகள் இடையே கடும் போட்டி இருந்தது. இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இதன்மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் உள்ளார். இவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. தமிழக வீரர் ஜெகதீசனை, ரூ.90 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

இதேபோல இந்திய வீரர் நிஷாந்த் சிந்துவை சென்னை அணி ரூ.60 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்திய வீரர்கள் சன்வீர் சிங்கை ஐதராபாத் அணி ரூ.20 லட்சத்திற்கும், ஷேக் ரஷீத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கும், விவ்ராந்த் சர்மாவை, ஐதராபாத் அணி ரூ.2.6 கோடிக்கும், இந்திய இளம் வீரர் உபேந்திர யாதவை, ஐதராபாத் அணி ரூ.25 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுத்தன.

இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லியை ரூ.1.9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி.

 

Share.
Leave A Reply

Exit mobile version