அமெரிக்காவில் வீசும் பனிப்புயலால் 20 கோடி பேர் பனிப்பொழிவின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இதனால் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் மிகவும் மோசமான கிறிஸ்துமஸ் குளிர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் கொண்டாட வேறு ஊர்களுக்கு சாலை மற்றும் வான் வழியாக பயணிக்கும் கோடிக் கணக்கானவர்களின் பயணம் தடைபட்டுள்ளது.