மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமத்தில் உள்ள மயானத்தில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று  (டிச 27) மாலை மீட்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் களுவாஞ்சிகுடி எருவில் பிரதேசத்தினை சேர்ந்த க.இராதாகிருஸ்ணன் என்ற 65 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தில் காயங்கள் காணப்படுவதுடன் அருகில் நச்சு பொருளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் எவ்வாறு இங்கு வந்தார் எதனால் மரணம் ஏற்பட்டது என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மரண விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. குறித்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version