சென்னையில் சைதாப்பேட்டை, சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டிருந்த டிஜிடல் விளம்பரப் பலகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த விளம்பரப் பலகையில் ‘1000 ரூபாய் கொடுத்தால் எந்த பெண்ணுடனும் உல்லாசமாக இருக்கலாம்‘ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதியுடன் கூடிய ஹோட்டல் ஒன்றின் சார்பிலேயே இந்த விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

இதனைப் பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் குறித்த இவ்வீடியோவானது இணையத்தில் வைரலாகத் தொடங்கியது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த விளம்பரப் பலகையை அகற்றியதோடு, இது குறித்து மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்தனர்.

விசாரணையில் குறித்த ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே இவ்வாறு, திட்டமிட்டு குறித்த விளம்பரத்தை ஒளிபரப்பியுள்ளமை தெரிய வந்துள்ளது.

அதே சமயம் குறித்த ஹோட்டலில் சட்ட விரோதமாக எந்த செயல்களும் நடைபெறவில்லை என்றும், இதுபோன்ற விளம்பரங்கள் இனிப் பொது இடங்களில் வெளியாகாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version