நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தேவராஜ் மற்றும் விமல் குமார் ஆகிய 2 பேர் எலக்ட்ரீசியனாக பணி புரிந்து வந்துள்ளனர்.

இதில், தேவராஜின் மனைவிக்கும் விமல்குமாருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், தேவராஜை கொலை செய்ய அவரின் மனைவி மற்றும் விமல்குமார் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், தேவராஜை கொலை செய்தால் வரக்கூடிய இன்சூரன்ஸ் தொகை 10 லட்ச ரூபாயில் இருந்து 2 லட்ச ரூபாய் தருவதாக கூறி கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளனர்.

திருச்செங்கோடு அருகே உடலில் வெட்டு காயங்களுடன் தேவராஜ் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தேவராஜின் மனைவி காயத்ரி, விமல் குமார் மற்றும் கூலிப்படை தலைவன் கோபாலகிருஷ்ணனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்

Share.
Leave A Reply

Exit mobile version