1.13 பில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருமானம்
Freelancer / 2023 ஜனவரி 07 , மு.ப. 07:00 – 0 – 19
AddThis Sharing Buttons
2022 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் 1.13 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு, சுற்றுலாத்துறை மூலம், 506.9 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதன்படி, 2022ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை வருவாய், 124.2 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. (a)