தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் உள்­ளிட்ட அவ்­வி­யக்­கத்தின் அனைத்துப் போர­ா­ளிகள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்­றா­ளர்கள், ஊட­கத்­து­றை­­யினர் ஆகி­யோரின் கணி­ச­மான பங்­­க­ளிப்­புடன் 2001ஆம் ஆண்டு ஒக்­டோபர் 21ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இரு தசாப்­தங்­க­ளுக்குப் பின்னர் முற்­றாகக் குலைந்­தி­ருக்­கின்­றது.

2008இல் இடம்­பெற்ற உள்ளூராட்சித் தேர்­தலில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும், அதே­யாண்டு கிழக்கு மாகா­ண­சபைத் தேர்­த­லிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு போட்­டி­யிட்­டி­ருக்­காத நிலையில் மேற்­கு­றித்த காலப்­ப­கு­தியில் நடை­பெற்ற ஏனைய அனைத்து வகை தேர்­தல்­க­ளிலும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்­களின் பேரா­த­ரவு பெற்ற தரப்­பா­கவே இருந்து வந்­தி­ருக்­கி­றது.

குறிப்­பாக, ஜனா­தி­பதி தேர்­தல்­களில் கூட்­ட­மைப்பு போட்­டி­யி­டாத போதும் பெரும்­பான்மை வேட்­பாளர் ஒரு­வருக்கே தமது ஆத­ரவை மட்டும் வெளிப்­படுத்தி வந்­தது.

அத்துடன் பாரா­ளு­மன்றத் தேர்தல்களில் பெறப்­பட்ட மொத்த ஆச­னங்­களில் ஏற்ற இறக்­கங்கள் காணப்­பட்­ட­ன. இருப்பினும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ‘கூட்­ட­மைப்பு’ என்ற ‘ஐக்­கிய கட்­ட­மைப்­பு’க்கே தொடர்ச்­சி­யாக வாக்­க­ளித்து வரு­கின்­றனர்.

2003இல் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் ‘ஆயு­தப்­போராட்­டத்தை’ அங்­கீ­க­ரித்து, அவர்­களே இலங்கைத் தமி­ழரின் ஏகோ­பித்த பிர­தி­நி­திகள் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அறி­வித்­தது. இந்த அறி­விப்பு கூட்­ட­மைப்­புக்­குள்ளே முதற்­கட்­ட­மாகப் பிள­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது.

ஆனந்­த­சங்­கரி தலை­மை­யி­லான தமிழர் விடு­தலைக் கூட்­டணி 2004தேர்­தலில் தமது சின்­னத்தைப் பயன்­படுத்த முடி­யா­தென நீதி­மன்ற தடை உத்­த­ரவைப் பெற்­றது.

அடுத்து, கூட்­ட­மைப்­பி­லி­ருந்து தமிழர் விடு­தலைக் கூட்­டணி வெளி­யே­றி­யது. அதன் பின்னர் அக்­கட்சி மக்கள் ஆணையைப் பெற­வில்லை.

அதன்­பின்னர் பிர­பா­கரன், மாவை.சோ.சேனா­தி­ரா­ஜா­வுக்கு அன்­பு­ரி­மை­யுடன் எழு­திய கடி­தத்­தினை அடுத்து, சேனா­தி­ரா­ஜாவும், தமி­ழர்­வி­டு­த­லைக்­ கூட்­ட­ணியில் இருந்து பிரிந்த சில உறுப்­பி­னர்­களும் தமி­ழ­ர­சுக்­கட்­சியை அரங்­கிற்கு கொண்­டு­வந்­தனர்.

அன்­றி­லி­ருந்து இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியே கூட்­ட­மைப்பின் தாய்க்­கட்­சி­யா­னது. அத்­துடன், அதன் பெயரும், சின்­னமும் தேர்­த­லுக்­காக தொடர்ச்­சி­யாக பயன்­ப­டுத்­தப்­ப­ட­லா­னது.

இந்­நி­லை­மை­யா­னது 2009ஆம் ஆண்டு போர் நிறை­வுக்கு வந்­த­தை­ய­டுத்து தமி­ழ­ர­சுக்­கட்­சியின் ஏகா­தி­பத்­தியப் போக்­கிற்கு வித்­திட்­டது.

அதன் விளை­வாக, 2010 மார்ச்சில், தமிழ்க் காங்­கிரஸ் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் வெளி­யே­றினார்.

அவர் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யேறி மீண்டும் மக்கள் ஆணை பெறு­வ­தற்கு ஒரு தசாப்­த­காலம் எடுத்­தது. அவ­ரைத் ­தொ­டர்ந்து, 2019இல் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன் வெளி­யே­றினார். அவ­ரது தரப்பும் 2020 பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மக்கள் ஆணையை இழந்­தது.

ஈற்றில் கூட்­ட­மைப்பில் புளொட், ரெலோ எஞ்­சி­யி­ருந்த நிலையில், கடந்த ஏழாம் திகதி மட்­டக்­க­ளப்பில் நடை­பெற்ற தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­தி­ய­குழுக் கூட்­டத்தில் உள்ளூராட்சி மன்­றங்­களில் அதிக ஆச­னங்­களை பெறு­த­லையும், ஆட்­சியைக் கைப்­பற்­று­த­லையும் மையப்­ப­டுத்­திய தேர்தல் வியூகம் என்ற தொழில்­நுட்ப கார­ணத்­தைக்­காட்டி தமி­ழ­ர­சுக்­கட்­சியே தனி­வழி செல்ல தீர்­மா­னித்­தது.

பின்னர், கொழும்பில் கடந்த பத்தாம் திகதி சம்­பந்தன் தலை­மையில் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுடன் நடை­பெற்ற ஒருங்­கி­ணைப்­பு­குழுக் கூட்­டத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­களும் தோல்வி அடை­யவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்ற தேர்தல் கூட்­டுக்கு ஒட்­டு­மொத்­த­மாக முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டது.

இதனால் சம்­பந்தன் கூட்­ட­மைப்பின் தலைவர் பத­வி­யையும், சுமந்­திரன் பேச்­சாளர் பத­வி­யையும், சேனா­தி­ராஜா பொதுச்­செ­ய­லாளர் பத­வி­யையும் இழந்­தி­ருக்­கின்­றார்­களே தவிர தமி­ழ­ரசின் தலை­வர்­க­ளுக்கு வேறு சேதா­ரங்கள் எவையும் ஏற்­ப­ட­வில்லை.

“தேர்­தலின் பின்னர் நாம் கூட்­ட­மைப்­பாக செயற்­ப­டுவோம்” என்று மாவை.சோ.சேனா­தி­ரா­ஜாவும், சுமந்­தி­ரனும் அச்­சு­லோ­கத்தை உள்­ளீர்த்­துக்­கொண்­டுள்ள ஏனைய தமி­ழ­ர­சுக்­கட்­சிக்­கா­ரர்­களும் அறி­விப்­புக்­களைச் செய்­தாலும் ‘சுட்ட மண் ஒட்­டாது’ என்­பது தான் நீண்­ட­கால புரிதல்.

கூட்­ட­மைப்பு சிதைந்து போகும் என்­பது எதிர்­பார்க்­கப்­பட்­ட­தொன்று தான். ஆனால் சம்­பந்­தனின் வாழ்நாள் காலத்­தி­லேயே அது நடை­பெறும் என்­பது எதிர்­பார்க்­கப்­படா­த­வொன்று.

இந்நிலை ஏற்படுவதற்கு தமி­ழ­ர­சுக்­கட்­சியின் செயற்­பா­டுகள், பங்­கா­ளிக்­கட்­சி­களின் இரட்­டைத்­தோணிப் பய­ணங்கள் என்று பல கார­ணங்­களை சுட்­டிக்­காட்ட முடியும். அவை பொதுப்­ப­டை­யா­னவை.

அவற்­றுக்­கெல்லாம் அப்பால் சுமந்­திரன் என்ற தனி­ம­னி­தனின் ‘அமி­லப்­ப­ரீட்சை’ தற்­போது வெற்றி பெற்­றி­ருக்­கின்­றது என்­பது தான் உள்­ளார்ந்த உண்மை.

சுமந்­திரன், 2015இல் தேர்தல் அர­சியல் களத்தில் இறங்­கி­ய­போது இப்­பத்­தி­யா­ள­ருக்கு வழங்­கிய செவ்­வி­யொன்றில் மிகத்­தெ­ளி­வாக, ஒரு­வி­ட­யத்­தினைக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதில், ஆயுத இயங்­கங்கள் மீது அவர்­கொண்­டி­ருக்­கின்ற கொள்கை முரண்­பாட்டை தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­ய­தோடு அதன் கார­ண­மா­கவே, வாய்ப்­புக்கள் வந்­த­போதும், விடு­தலைப் புலிகள் மௌனிக்­கப்­படும் வரையில் தான் அர­சியல் களத்­திற்குள் வார­தி­ருந்­த­தா­கச்­சுட்டிக் குறிப்­பிட்­டுள்ளார்.

அவ்­வி­த­மா­னவர், தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைமை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்றார். இதனை அவர் மறுக்­கலாம். ஆனால் அவ­ரு­டைய ஆத­ர­வா­ளர்கள் அதற்­காக இயங்க நிலையில் உள்­ளனர்.

நிகழ்­நிலை யதார்த்­தமும் அதுவே. அப்­ப­டி­யி­ருக்க, அந்த இலக்­கினை அவர் அடை­கின்­ற­போது, கூட்­ட­மைப்பின் தலை­வ­ராக அவரால் வர­மு­டி­யாது.

ஏனென்றால் பங்­கா­ளி­க­ளாக ரெலோ, புளொட் கூட்டிலிருந்தால் நிச்­ச­ய­மாக அவை அதனை எதிர்க்கும்.

அதே­நேரம் கூட்­ட­மைப்பின் தலைமை என்­பது சுமந்­தி­ரனின் இலக்கும் அல்ல. ஆகவே கூட்­ட­மைப்­பாக தொடர்­வதில் இருக்கும் நன்­மை­க­ளையும் விடவும் கூட்­ட­மைப்­பாக இல்­லா­ம­லி­ருந்தால் கிடைக்கும் நன்­மைகளே அதிகம்.

குறிப்­பாக சுமந்­திரன் தமி­ழ­ர­சுக்கு தலைமை ஏற்­கின்ற தரு­ணத்தில் கூட்­ட­மைப்பு உடைவு நிகழ்ந்தால் அந்த வர­லாற்­றுப்­ப­ழியை வாழ்நாள் பூரா­கவும் சுமக்க வேண்­டிய நிலைமை அவ­ருக்கு ஏற்­படும் என்­பது அதில் முக்­கி­ய­மா­னது.

அடுத்து, தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மையை ஏற்­ப­தற்கு உட்­கட்­சிக்குள் காணப்­படும் சக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சிறீ­த­ரனின் போட்­டி­யைக்­கூட சமா­ளித்து விடலாம்.

ஆனால், பங்­கா­ளி­க­ளான சித்­தார்த்­தனும், செல்­வமும் ‘ஆறு கட்­சி­களின் கூட்டு’ என்ற போர்­வையில் சேனா­தி­ரா­ஜாவை அவ்­வப்­போது அழைத்துச் செல்­வது எதிர்­கா­லத்தில் தலை­வ­லி­யாக மாறி­விடும் என்­பது சுமந்­தி­ரனால் நிச்­சயம் உய்த்­து­ண­ரப்­பட்­டி­ருக்கும்.

காரணம், முத­ல­மைச்சர் பதவி அல்­லது கூட்­­ட­மைப்பின் தலை­மைத்­துவப் பதவி ஆகி­ய­­வற்றை மையப்­ப­டுத்தி செல்­வமும், சித்­தார்த்­தனும் சேனா­தி­ரா­ஜாவை கையாள முனை­கின்­ற­போது சுமந்­தி­ரனின் தலை­மையை நோக்­கிய அனைத்து நகர்­வு­க­ளுக்கும் ‘செக்’ வைக்­கப்­பட்டு விடும் என்­பது அவ­ராலோ அவ­ரது ஆத­ரவு தரப்­பி­ன­ராலோ இல­கு­வாக உணர்ந்­து­கொள்ள முடியும் விட­ய­மா­க­வுள்­ளது.

ஆகவே, பங்­கா­ளி­களின் வலை­க­ளுக்குள் தமி­ழ­ரசின் தற்­போ­தைய தலைமையை சிக்­காது வைத்­துக்­கொள்­வதே அவ­ரது எதிர்­கால இலக்­கிற்கு பாது­காப்­பா­னது.

அதற்கு ஒரே வழி பங்­கா­ளி­க­ளி­டத்­தி­லி­ருந்து சேனா­தி­ரா­ஜாவை நிரந்­த­ர­மாக அந்­தி­யப்­ப­டுத்­து­வது தான்.

அதே­நேரம், எதிர்­கா­லத்தில் தலை­மையை நோக்கி விரை­வாக நகர்­வ­தாக இருந்தால் கட்­சி­யினுள் தனது செல்­வாக்கு எவ்­வாறு இருக்­கின்­றது என்­பதை நாடி­பி­டித்துப் பார்ப்­பது சுமந்­தி­ர­னுக்கு மிகவும் அவ­சி­ய­மா­கின்­றது.

அதற்கு, உள்ளூராட்சி மன்­றத்­தேர்­தலை தொழில்­நுட்ப ரீதி­யான அடிப்­ப­டையில் தனித்­த­னி­யாக முகங்­கொ­டுத்தல் என்­பது பாரி­ய­ளவில் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­த­தாத விட­ய­மொன்­றாக உள்­ளது.

அதே­நேரம், தமி­ழ­ரசு தனி­வழி என்­பதன் ஊடாக கடந்த தடவை உள்ளூராட்­சி­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருந்து நெருக்­க­டி­களைச் சந்­தித்­த­வர்­களின் பேரா­த­ரவைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கும், புதி­தாக தமக்குச் சார்ந்­த­வர்­களை உள்­ளீர்ப்­ப­தற்­கும் வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமையும் என்­பது சுமந்­தி­ர­னது கணிப்­பாக இருக்­கலாம்.

அதன­டிப்­ப­டையில் தான், மட்­டக்­க­ளப்பு மத்­திய குழு கூட்­டத்தில் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிகள் தனித்­த­னி­யாக உள்ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை முகங்­கொடுப்போம் என்ற முன்­மொ­ழிவை சுமந்­திரன் பின்­ன­ணியில் இருந்து நகர்த்­தி­யி­ருக்­கின்றார்.

(இத­னைக்­கூட மத்­தி­ய­கு­ழுவின் பெரும்­பான்­மை­ய­ன­வர்கள் முன்­மொ­ழிந்­தார்கள் என்று சுமந்­தி­ரனால் பிர­தி­ப­லிப்புச் செய்ய முடியும்) இதனால் கூட்­ட­மைப்பு உடை­யாது என்றும், அதிக உறுப்­பி­னர்­களை பெற்று, கூட்­ட­மைப்பே அதிக சபை­களில் ஆட்சி அமைக்கும் அதனால் கூட்­ட­மைப்பு மேலும் பல­ம­டையும் என்றும் அவர் தர்க்­க­ரீ­தி­யாக கூறி­யி­ருக்­கின்றார்.

இதற்கு, அன்றைய தினம் பிரசன்னமான 34 மத்திய குழு உறுப்பினர்களில் வெறு­மனே மூன்று பேர் தான் எதிர்ப்­புக்­களை வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர்.

தலைவர் சேனா­தி­ராஜா, அவ­ரு­டைய புதல்வர் கலை­அ­முதன், மற்றும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கே.வி.தவி­ராசா ஆகி­யோரே அவர்கள்.

இதில் கே.வி.தவ­ரா­சா­வுக்கும், சுமந்­தி­ர­னுக்கும் இடை­யி­லான பனிப்­போரால் தவ­ச­ராசா எதிர்த்தார் என்றும், தந்தை எதிர்த்­ததால் புதல்­வரும் எதிர்த்தார் என்றும் கூட எதிர்­வரும் நாட்­களில் வாத­மொன்றை சுமந்­திரன் தரப்பு வெளிப்படுத்தி மூவரின் எதிர்ப்­பினைக் கூட மூன்றாம் நிலைக்குக் கொண்டு செல்­வ­தற்கு ஏது­நி­லைகள் இல்­லா­ம­லில்லை.

அதே­நேரம், சேனா­தி­ரா­ஜா­வுக்கு ஆத­ர­வாக இருக்கும் சிறீ­த­ரனோ, சாள்ஸ் நிர்­ம­ல­நா­தனோ கூட்­டத்­திற்கு வருகை தந்­தி­ருந்தால் மேற்­படி தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டி­ருக்­காது என்றும் கூறிவிடமுடியாது.

ஏனெனில் கிளிநொச்சியில் சிறீதரனும், மன்னாரில் சாள்ஸ் நிர்மலநாதனும் தமது தரப்பு உறுப்பினர்களை களமிறக்குவதிலேயே தீவிரமாக உள்ளனர்.

குறிப்பாக, சிறீதரன் கடந்த தேர்தலிலேயே கிளிநொச்சியில் தன்னுடைய சிபார்சு உறுப்பினர்களை மையப்படுத்தியே வேட்பாளர் பட்டியலை தயாரித்து இருந்தார்.

புளொட், ரெலோவினை அவர் முழுமையாக நிராகரித்தும் இருந்தார். அவ்வாறிருக்கையில், அவர்கள் சுமந்திரன் நகர்த்திய தீர்மானத்தினை மாற்றியமைத்திருப்பார்கள் என்று கூறி விட­முடியாது.

எது, எவ்வாறாயினும், சுமந்திரனின் பின்னணியுடன் நகர்த்­தப்பட்டதொரு தீர்மானத்திற்கு மத்தியகுழு அளித்­துள்ள அங்கீகாரமானது அவருடைய தலைமைத்துவ பய­ணத்­துக்கான முதற்கட்ட வெற்றியாகும். அத்துடன், அந்த­வெற்றி அவருக்கான எதிர்காலச் சவால்கள் பலவற்றை­யும் தகர்த்திருக்கின்றது.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கூட்டு குலைந்தாலும் தன்னுடைய அமிலப்­பரி­சோதனையில் வெற்றிபெற்ற முதல் நபராகிறார் சுமந்திரன்.

இவ்வாறானதொரு பரிசோதனையைச்செய்த மற்றைய நபர் யார் என்பதையும் சுமந்திரனுக்கு கூட்டமைப்பின் தலை­மையை வகிப்பதற்கும் இன்னமும் வயிலொன்று திறந்­தி­ருப்பதையும் அடுத்தவாரம் பார்க்கலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version