மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் மற்றுமொரு கைதியை பட்டப்பகலில் வாயை பொத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவமொன்று வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இயற்கை உபாதையை கழிப்பதற்காக மலசலக்கூடத்துக்கு சென்ற 29வயதான கைதியை பின்தொடர்ந்த 59 வயதான கைதியே மலசலக்கூடத்துக்குள் வைத்து, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட கைதி, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர், ஊழல் குற்றச்சாட்டில் 6 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள், பொரளை நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

துஷ்பிரயோகம் செய்யும் போது, நேரில் பார்த்ததாக கூறப்படும் 45 வயது கைதி ஒருவரிடமும், பாதிக்கப்பட்ட கைதியிடமும் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version