யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற நபர் , பணத்தினை மீள செலுத்தாத காரணத்தால் அவரை கடத்தி சென்று, தாக்குதல் மேற்கொண்டு, சித்திரவதை புரிந்து அதனை சமூக வளைத்தளங்களில் பகிர்ந்த நபர்களை கைது செய்வதற்கு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அதேவேளை பாதிக்கப்பட்டவரையோ , தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு அறிவிக்குமாறும், மீற்றர் வட்டிகளால் பாதிக்கப்பட்டு, சித்திரவதைகள் , தாகலகுதல்களுக்கு எவரேனும் உள்ளாகி இருந்தால், அருகில் உள்ள காவல்நிலையங்களில் முறைப்பாடு செய்து கொள்ள முடியும் என வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் அடங்கிய கும்பல் ஒன்று, கடத்தி சென்று, தோட்ட பகுதி ஒன்றில் வைத்து கடுமையாக பொல்லுகள் மற்றும் தமது கை, கால்களால் தாக்கி வட்டி பணத்தை தா என சித்திரவதை புரிந்துள்ளனர்.

குறித்த தாக்குதலை அந்த குழுவினர்களில் ஒருவர் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

குறித்த வீடியோ வைரலானதை அடுத்து, அது தொடர்பிர் வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , அவரின் பணிப்பின் பேரில் விசாரணைகள் முன்னெடுப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version