யாழ். சாவகச்சேரி நுணாவில் ஏ-9 வீதியில் அரச பேருந்தும், தனியார் மினி பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் நேற்று பிற்பகல் 4.15 மணி யளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்கு வரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்ட போது எதிர்த் திசையில் வந்த மினி பஸ்ஸுடன் மோதி உள்ளது.

இதன் போது வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்ட போதிலும் பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version