அண்மைக்காலமாக வருவாயை அதிகரிக்கும் நோக்கில் உலகின் முன்னணி நிறுவனங்களான டுவிட்டர், மெட்டா, அமேசான், கூகுல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றன.

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு கட்டுக்கட்டாக போனஸ் தொகையை வழங்கியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹெனான் மாகாணத்தில் இயங்கிவரும் `ஹெனன் மைன்` என்ற குறித்த நிறுவனத்தில் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும், ஹெனன் மைன் நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.16 பில்லியன் யுவான்-ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அண்மையில் அந்நிறுவனமானது பணத்தை மலை போல குவித்து வைத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையைக் கட்டுக்கட்டாக வழங்கியுள்ளது.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version