பிரித்தானிய ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனின் நினைவேந்தல் ஜனவரி 30 ஆம் திகதி தென்னிந்திய நகரமான வேலூரில் நடைபெற்றதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இவர் மதுரை நாயக்கர் வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவார். இவர் முதலில் கண்டி நாட்டை ஆண்ட ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனின் மருமகன் ஆவார்.
பிரித்தானியர 1815 பெப்ரவரி 10 ஆம் தேதி கண்டியை கைப்பற்றினர். மார்ச் 2 ஆம் திகதி என்னும் கண்டி ஒப்பந்தம் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியர்களால் பறிக்கப்பட்டது.
அரசர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டார். அங்கே பிரித்தானியரால் சிறை வைக்கப்பட்டார். 1832 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் தனது 52 ஆவது வயதில் காலமானார்.
இந்தநிலையில் அவருடைய சந்ததியினர் அவரது நினைவாக இன்றும் மத வழிபாடுகளை நடத்துகிறார்கள்.
வேலூரில் முட்டு மண்டபம் என்ற இடத்தில் அரசர் மற்றும் அரசியின் அஸ்தி புதைக்கப்பட்டுள்ளது.
இது மைசூர் இராச்சியத்தின் ஆட்சியாளரான திப்பு சுல்தானுக்கு சொந்தமானது.
கண்டி அரசனும் அவனுடைய சில பிரபுக்களும் 16 வருடங்களாக அங்கு சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
ஸ்ரீவிக்ரம ராஜசிங்கன் தனது 52 வது வயதில் அஜீரணத்தால் ஏற்படும் சிக்கல்களால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடலம் பாலாற்றின் கரையில் தகனம் செய்யப்பட்டு ஆங்கிலேயர் காலத்தில் தமிழ் பாரம்பரியத்தில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.
அப்போதிருந்து, அரச குடும்பத்தின் இறப்பு நினைவு, இந்து முறைப்படி அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.