குருநாகல் வாவி சுற்றுவட்ட வீதியில் யத்தம் பலாவையிலிருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி நேற்று (7) விபத்துக்குள்ளானதில் 9 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட ஐவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 9 மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.