தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் பேரழிவை ஏற்படுத்திய இரண்டு நிலநடுக்கங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். வானுயர்ந்த கட்டடங்கள் நிமிடத்தில் இடிந்து விழுவதையும் சிலர் கையால் தோண்டி எடுத்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வேதனையான வீடியோக்களும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

சில படங்கள் துருக்கியின் முக்கியப் பகுதியான கஹ்ராமன்மாராஸில் இருந்து எடுக்கப்பட்டவை .

அதில் குறிப்பாக ஒரு புகைப்படத்தில் ஒரு தந்தை தனது இறந்த மகளின் கையைப் பிடித்தபடி மீட்புப் பணியாளர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு மீட்புப்பணியாளர்கள் இடிபாடுகளிடையே நசிந்து கிடந்த அவரது உடலை மீட்டு எடுத்துள்ளனர்.

இடிபாடுகளுக்குள் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் மெசுட் ஹான்சர் என்பவர் தனது 15 வயது மகளான இர்மாக்கை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்த கட்டடம் நொறுங்கி இருக்க அதற்கு இடையில் சிக்கி இருக்கும் மகளை மீட்க கையில் ஒருவகையான சுத்தியலுடன் அதன் அருகில் அமர்ந்திருக்கிறார்.

தென்கிழக்கு துருக்கியில் அமைந்துள்ள கஹ்ராமன்மாராஸின் பசார்சிக் மாவட்டம் முதல் நிலநடுக்கத்தின் மையப்பகுதியாகும்.

முதலில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சில மணிநேரங்களுக்குப் பிறகு, 7.7 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் அங்கே பதிவானது.

Share.
Leave A Reply

Exit mobile version