மாத்தளை இறத்தோட்ட ரிவஸ்டன் கோனாமட பகுதியில் காரொன்று சுமார் 200 அடி பள்ளத்திலிருந்து வீழ்ந்த விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் மனைவி உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாத்தளை உக்குவெல குர்லவெல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான திலருக்ஷி விக்ரமசிங்க என்ற பொலிஸ் சார்ஜன்டின் மனைவியே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மாத்தளை தலைமையக பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் தனது குடும்பத்துடன் ரிவஸ்டன் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.