பிரபுதேவாவுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தனுஷ் நடிப்பில் ‘3’, கௌதம் கார்த்தி நடிக்பில் ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கி வெளியான ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அவர் தற்போது ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியா ரோலில் நடிக்கிறார் எனப் படக்குழு தெரிவித்தது.

இது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவ்வப்போது தாம் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைதைளங்களில் பகிர்வார்.

இந்நிலையில், நடன இயக்குநர்பிரபுதேவாவுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “ரப்பர் மேன் பிரபுதேவா அண்ணணுடன் சில ராப் ஸ்டைல் உடற்பயிற்சி. அண்ணன் – தங்கை பாண்டிங்” எனப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது

Share.
Leave A Reply

Exit mobile version