காஷ்மீரில் ராகுல் காந்தி, பிரியங்கா இருவரும் பனிசறுக்கு சவாரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

குல்மார்க், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி சமீபத்தில் கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ’ என்ற இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டார்.

இந்த நிலையில் தற்போது அவர் தனிப்பட்ட முறையில் காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு ராகுல் காந்தி தனது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியுடன் பனிசறுக்கு செய்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவை இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ராகுல் காந்தி, பிரியங்கா இருவரும் மாறி, மாறி பனிச்சறுக்கு வாகனத்தை ஓட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ராகுல் காந்தி பனி சறுக்கு கண்ணாடி அணிந்து இருந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version