இரும்பு பேரலில் நீந்திக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கலவான பபோடுவ பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் இரும்பு பேரலில் நீந்திக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மின்னல் தாக்கத்துக்கு உள்ளான இந்தநபர் கலவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் அவரது மனைவியும் காயமடைந்து இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.