யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சகோதரிகளான 72 மற்றும் 74 வயதான இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா என காணப்பட்டுள்ளனர்.

குறித்த சகோதரிகளில் ஒருவர் திருமணமானவர் எனவும் அவரது கணவரும், மகனும் உயிரிழந்துள்ளதுடன், மற்றவர் திருமணமாகாத நிலையில், இருவரும் தனிமையில் வாழ்ந்துவந்துள்ளனர்.

இந்த நிலையில், வீட்டின் பின்புறம் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version