நாட்டில் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்தப்படக்கூடிய நிலையொன்று உருவாகலாம் என இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது, மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படுகின்றது.

இவ்வாறு, நாளாந்தம் இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படாமல் மின்சாரத்தை வழங்கினால், எதிர்காலத்தில் நிலைமை மோசமடையக்கூடும் என, மின் பொறியியலாளர் சங்க தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்கள் வழமையான முறையில் மின்சாரத்தை அதிகளவு பயன்படுத்த பழக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version