தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப்போவதாக உலகத் தமிழர் கூட்டமைப்புத் தலைவர் நெடுமாறன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் இலங்கை தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. அவர் உயிருடன் இருக்கிறார் என்ற ஆதாரத்தை நாங்கள் வெளியிட விரும்பினால், உங்களை அழைத்தே நாங்கள் கூறுவோம் என தெரிவித்தார்.

எனக்கு அவர் தொடர்பான ஆதாரம் கிடைத்தால், நிச்சயம் பத்திரிகையாளர்களை சந்தித்து, அந்த ஆதாரங்களை வெளியிடுவேன் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என கடந்த மாதம் 13ஆம் திகதி பழ.நெடுமாறன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் முன்னதாக இந்த கூற்றை மறுத்த இலங்கையின் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ரவி ஹேரத், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பதற்கான மரபணுச் சான்றிதழ்கள் உட்பட அனைத்து பதிவுகளும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version