ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் மணமகன் தரப்பிலிருந்து போதுமான வரதட்சணை கிடைக்கவில்லை என்று கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

 

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் மணமகன் தரப்பிலிருந்து போதுமான வரதட்சணை கிடைக்கவில்லை என்று கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

வரதட்சணை கொடுமையால் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை. அல்லது மாப்பிள்ளை வீட்டார் என்றுதான் செய்திகளில் கேள்விபட்டிருப்போம் ஆனால் தெலங்கானாவில் வரதட்சணை போதவில்லை என்று கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்தியிருப்பது இதுதான் முதல் முறை.

தெலங்கானாவின் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இந்த மாவட்டத்தில் அதிக அளவில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள பழங்குடியின சமூகத்தை சேர்ந்த யசோதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் இளம்பெண்ணுக்கு நீண்ட நாட்களாக மாப்பிள்ளை தேடப்பட்டு வந்திருக்கிறது.

ஆனால் எங்கும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் பக்கத்து ஊரில் இவருக்கு மாப்பிள்ளை கிடைத்திருக்கிறது.

எனவே முதற்கட்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து திருமணத்திற்கான தேதி குறிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடந்துள்ளன.

வித்தியாசமான திருமணம்

ஆனால் தொடக்கத்திலிருந்து இந்த திருமணத்தில் யசோதாவுக்கு பெரிய அளவில் விருப்பம் இருக்கவில்லை.

இது குறித்து தனது பெற்றோரிடம் சொன்னபோது, அவர்கள் யசோதாவின் கருத்தை ஏற்காமல் திருமணத்திற்கு தயாராக வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இல்லையெனில் தங்களை மறந்துவிட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து வேறு வழியின்றி திருமணத்திற்கு யசோதா தயாராகியுள்ளார்.

நிச்சயிக்கப்பட்டபடி நேற்று முன் தினம் திருமணம் நடக்க இருந்திருக்கிறது. ஆனால் மற்ற திருமணத்தைவிட இந்த பழங்குடி மக்களின் திருமணம் என்பது முற்றிலும் வித்தியாசமானதாகும்.

வரதட்சணை

அதாவது மற்ற சமூகங்களில் மணப்பெண் வீட்டிலிருந்து வரதட்சணை தருவது வழக்கம். ஆனால் இந்த சமூகத்தில் மாப்பிள்ளை வீட்டிலிருந்து மணப்பெண் வீட்டிற்கு வரதட்சணை கொடுக்க வேண்டும். அப்போதுதான் திருமணமே நடக்கும்.

எனவே மணப்பெண் வீட்டிற்கு ரூ.1 லட்சம் வரதட்சணையாக கொடுப்பதாக பேசி முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் திருமணத்தன்று காலையில் மணமேடையில் மாப்பிள்ளை இருக்க, பெண் அழைப்பு நடந்திருக்கிறது.

முகூர்த்த நேரம் முடிய இன்னும் கொஞ்ச நேரம் மட்டுமே இருக்கையில் கடைசி வரையில் பெண் மணமேடைக்கு வரவேயில்லை.

ரூ.2 லட்சம்

மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் எங்கே என்று கேள்வியழுப்பியுள்ளனர். என்ன கேள்வியெழுப்பியும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

எனவே கடுப்பான மாப்பிள்ளையின் பெற்றோர் யசோதாவின் வீட்டிற்கு சென்று ஏன் இன்னும் திருமண மண்டபத்திற்கு வரவில்லை என்று கேட்டுள்ளனர்.

அப்போதுதான் அங்கு ட்விஸ்ட் நடந்திருக்கிறது. அதாவது, “நீங்கள் கொடுக்கும் வரதட்சணை போதவில்லை.

எனவே அதனை ரூ.2 லட்சமாக கொடுக்க வேண்டும். அப்போதுதான் நான் திருமண மண்டபத்திற்கு வருவேன்” என்று கூறியுள்ளார். இதனை எதிர்பார்க்காத மாப்பிள்ளை வீட்டார் சமாதானம் பேசியுள்ளனர்.

பஞ்சாயத்து

“ஊர் முன்னிலையில் ரூ.1 லட்சம் கொடுப்பதாகதானே பேசினோம், இப்போது வந்து 2 லட்சம் கேட்டால் எங்கே போவது?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் யசோதா தன்னுடைய முடிவில் கறாராக இருந்துள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார் காவல் நிலையத்தை அனுகியுள்ளார்.

பின்னர் இரு வீட்டார் தரப்பிலும் சமாதானம் பேசப்பட்டுள்ளது. கடைசியாக திருமணத்திலிருந்து தாங்கள் விலகிக்கொள்வதாக மாப்பிள்ளை வீட்டார் அறிவித்துள்ளனர்.

எனவே இத்திருமணம் பாதியில் நின்றிருக்கிறது. வரதட்சணை பிரச்னை காரணமாக பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Share.
Leave A Reply

Exit mobile version