சீனாவில் புழுக்கள் மழையாக பொழிந்து, வீதிகளில் நிரம்பி கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தலைநகர் பீஜிங்கில் உள்ள சாலையில் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் மேல் புழுக்கள் மழையாக பொழிந்தது போல் விழுந்து கிடந்தது. பழுப்பு நிறத்தில் வளைந்தும், நெளிந்தும் கிடந்த இந்த புழுக்கள் தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

இவை எப்படி இங்கு வந்திருக்கும் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. எனினும் வானில் இருந்து புழுக்கள் தங்கள் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக மக்கள் சிலர் குடை பிடித்தபடி செல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து நியூயார்க் போஸ்ட் கூறும்போது, ஒரு சூறாவளியில் பூச்சிகள் சிக்கும்போது இதுபோன்று நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

சீன பத்திரிகையாளர் மறுப்பு

ஆனால் சீன பத்திரிகையாளரான ஷென் ஷிவெய் இதனை போலியான வீடியோ என்றும், சமீப நாட்களாக பீஜிங்கில் மழையே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், புழுக்கள் கீழே விழுவது இயல்பானது என்றும், அவை புழுக்கள் அல்ல, கம்பளிப்பூச்சிகள் என்றும் சிலர் கூறுகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version