பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச  நீதிமன்றில் ஆஜராகத் தவறியமை தொடர்பில்  அவரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வந்தபோது,  பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் 7 பேருக்கு எதிராக கறுவாக்காடு பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (13) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நீதிமன்றில் ஆஜராகத் தவறியமை தொடர்பில்  அவரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான்  பிரசன்ன அல்விஸ் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் அல் ஹுஸைன்  நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது இவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version