ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பிலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
உக்ரைனில் தனது படைகள் இழைத்த யுத்த குற்றங்களிற்கு புட்டினே பொறுப்பு என சர்வதேச குற்றவியல்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புட்டின் உக்ரைன் சிறுவர்களை சட்டவிரோதமாக ரஸ்யாவிற்கு நாடு கடத்தினார் என சர்வதேச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
அவர் நேரடியாகவும் ஏனையவர்களுடன் இணைந்தும் இந்த குற்றங்களில் ஈடுபட்டார் என ஐசிசி தெரிவித்துள்ளது.
சிறுவர்களை நாடு கடத்துவதை தடுப்பதற்கு ரஸ்ய ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சிறுவர்களிற்கான ரஸ்ய ஆணையாளருக்கு எதிராகவும் பிடியாணை பிறப்பித்துள்ளது.