காட்டில் ஆள் உயர கரடியிடம் சிக்கிய தருணத்தில் இளம்பெண்ணின் புத்திசாலித்தன முடிவால் அவர் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

நியூயார்க், சுற்றுலா செல்வது என்பது எல்லோருக்கும் பிடித்த ஒரு விசயம். கார், வேன், பஸ் மற்றும் இரு சக்கர வாகனங்களில் அல்லது நடந்து கூட சுற்றுலா செல்பவர்கள் உண்டு.

குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ செல்லும்போது நமக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்படும். சில சமயங்களில் அது வேறு விதத்திலும் முடிவடைவது உண்டு.

இதுபோன்று தனது தோழிகளுடன் இளம்பெண் ஒருவர் காட்டு வழியே பயணித்து உள்ளார். அப்போது, வழியில் காட்டு பகுதியில் இருந்து ஆள் உயரத்திற்கு கருமை நிறத்தில், பெரிய கரடி ஒன்று அவர்களை பின் தொடர்ந்து நெருங்கி உள்ளது.

பொதுவாக வனவிலங்குகள் தங்களுக்கு தொந்தரவு ஏற்படும்போது, அவை தாக்கும் இயல்பு கொண்டவை. அதுவும், கரடியை பற்றி நாம் சில கதைகளில் படித்து இருப்போம். அதன்படி, அந்த இளம்பெண் அமைதியாக அப்படியே நின்று விட்டார்.

அவரது இந்த புத்திசாலித்தன முடிவு அவருக்கு கை கொடுத்து உள்ளது. மெல்ல நடந்து வந்த கரடி, இளம்பெண்ணின் பின்னால் நெருங்கி நின்றபடி காணப்பட்டது.

இதன்பின் இரண்டு கால்களில் மனிதர்களை போன்று நின்று கொண்டு, இளம்பெண்ணின் பின்னால் இருந்து அவரை அணுகி உள்ளது. அவரை சற்று நேரம் மோப்பம் பிடித்தபடி இருந்தது.

.அவருடன் வந்த இரு தோழிகளும் அமைதியாக நின்று விட்டனர். எனினும், அவர்களில் சற்று தொலைவில் நின்ற ஒருவர் கரடியை பார்த்தபடி மெல்ல நடந்து, நடந்து தப்பி போவதற்காக முயற்சித்து உள்ளார்.

இந்த இளம்பெண்ணை சுற்றி, சுற்றி பார்த்த அந்த கரடி, பின்னர் அவரை இழுத்து தள்ளி சென்றது. அப்போதும் இளம்பெண் அமைதியாக நின்று உள்ளார்.

அவரது முடியை பிடிக்கவும், முகத்தில் மோப்பம் பிடிக்கவும் செய்து உள்ளது. அதன் பின், எதுவும் செய்யாமல் திரும்பி நடந்து செல்ல தொடங்குகிறது.

அதனுடன் அந்த வீடியோவும் முடிவடைகிறது. அவர்கள் எதிர்வினையாக ஏதேனும் செய்ய முயற்சித்து இருப்பார்கள் என்றாலோ, தப்பியோடவோ அல்லது அதனை தாக்குவது உள்பட வேறு ஏதேனும் முடிவை எடுத்திருந்தால், ஆபத்தில் முடிந்திருக்கும்.

அப்படி அவர்கள் எதுவும் விபரீத முடிவை மேற்கொள்ளாமல் அமைதியாக நின்றது, அவர்கள் அனைவரையும் காப்பாற்றி உள்ளது. இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு உள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version