மார்ச் மாதத்தின், முதல் 26 நாட்களில், இலங்கைக்கு ஒரு இலட்சம் சுற்றுலா பயணிகள், சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 714 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில், ரஷ்யாவிலிருந்து, 22 ஆயிரத்து 38 பேரும், இந்தியாவிலிருந்து 15 ஆயிரத்து 695 பேரும், பிரித்தானியாவில் இருந்து 8 ஆயிரத்து 555 பேரும், ஜேர்மனியில் இருந்து 8 ஆயிரத்து 256 பேரும் அடங்குவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version