கிளிநொச்சி பகுதியில் இருந்து 2 குடும்பங்களைச் சேர்ந்த 1 ஆண், 5 பெண்கள், 1 ஆண் குழந்தை, 1 பெண் குழந்தை உட்பட 8 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் இவ்வாறு நேற்று முன்தினம் (27) இரவு 8 மணி அளவில் இலங்கை தலைமன்னாரில் இருந்து 1.45 இலட்சம் இலங்கை பணம் கொடுத்து மர்மப்படகு மூலம் இரவு 10.30 மணிக்கு தனுஷ் கோடி மூன்றாம் மணல் தீடையில் இறக்கி விடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அவர்களை நேற்று காலை இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் சென்று மீட்டு தனுஷ் கோடியை அடுத்த அரிச்சல் முனை கடற்கரையில் ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தற்போது அவர்களை மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரணைக்குப்பின் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version