சென்னை: Aishwarya Rajinikanth (ஐஸ்வர்யா ரஜினிகாந்த்) தனுஷுக்கு முன்பாகவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டு பேரை காதலித்ததாகவும், அதில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் பயில்வான் ரங்கநாதன் பற்ற வைத்திருக்கிறார்.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். காதல் கொண்டேன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தனுஷுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது உருவான பழக்கம் நாளடைவில் இருவருக்கும் காதலாக மாறியது.
இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
பிரிவு: ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 என்ற படத்தையும் இயக்கினார். தொடர்ந்து வை ராஜா வை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் தனுஷ்.
இரண்டு பேரின் திருமண வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. திடீரென இரண்டு பேருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சில வருடங்களுக்கு முன்னர் பிரிவதாக தத்தமது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர்.
ஆனால் முறைப்படி இருவரும் விவாகரத்து மனுவை தாக்கல் செய்யாமல் இருக்கின்றனர்.
சேர்ந்துவிடுவார்கள்: தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஏற்பட்டிருக்கும் பிரச்னை எல்லா கணவன் மனைவிக்குள்ளும் நடக்கும் பிரச்னைதான்.
அவர்கள் விரைவில் மீண்டும் சேர்ந்துவிடுவார்கள் என பலர் கூறினர். மேலும், தேவைப்படும் நேரத்தில் இரண்டு பேரும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என தனுஷின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான சுப்ரமணியம் சிவா தன்னிடம் கூறியதாக பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்
சிம்புவுடன் காதல்:
இதற்கிடையே பல வருடங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவும், சிம்புவும் காதலித்ததாக தகவல் பரவியது.
அதுமட்டுமின்றி தங்களுக்குள் இருக்கும் காதல் விவகாரத்தை தனுஷிடம் சிம்பு பேசியதாக ஒரு ஆடியோவும் அந்தக் காலகட்டத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் அந்த ஆடியோ எந்த அளவுக்கு உண்மை என்பது யாருக்கும் தெரியாது. அதேசமயம் அது வெறும் வதந்தி எனவும் கூறப்பட்டது.
அந்தப் பேட்டியில் பேசிய அவர், “தனுஷ் – ஐஸ்வர்யா காதல் விவகாரம் பூதாகரமானபோது பத்திரிகையாளர்களை அழைத்தார் ரஜினி.
அப்போது என்ன விசேஷம் என்று கேட்டேன். அதற்கு அவர் உங்களுக்கு தெரியாததா?. தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காதல் என்று பத்திரிகையாளர்கள்தான் எழுதினீர்கள். எனவே கஸ்தூரி ராஜாவிடம் பெண் எடுத்துக்கொள்ள சம்மதமா எனக்கேட்டேன்.
அவரும் ஒத்துக்கொண்டார். எனவே நீங்கள் எழுதியதை உண்மையாக்கிவிட்டேன் என கூறினார்” என்றார்.
மேலும் பேசிய அவர் தனுஷுக்கு முன்னதாகவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சிம்புவை காதலித்தார்.
அதன் பிறகு அவர் பிரபல தொழிலதிபரின் மகனை காதலித்தார். ஆனால் அவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார்.
எதற்காக இப்போது அந்தக் குப்பையை கிளற வேண்டும். இந்தப் பிரச்னைகளுக்கு பிறகும் தனுஷும் ஐஸ்வர்யாவும் சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள் எனவும் அந்தப் பேட்டியில் பயில்வான் தெரிவித்தார்.