அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியோவில் உள்ள தனியார் கிளப் ஒன்றுக்கு வெளியே கடந்த சனிக்கிழமை பெண்கள் அரைகுறை ஆடையில் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்தும், அடித்தும் சண்டையில் ஈடுபட்டனர்.

இது குறித்த வீடியோ @leooooo69 டுவிட்டர் கணக்கின் மூலம் பகிரபட்டு உள்ளது. வீடியோவில், பெண்கள் குழு ஒன்று சண்டையிடுவதைக் காட்டுகிறது.

இரண்டு பெண்கள் சண்டையிட்டதால் சில ஆண்கள் அவர்களை சமரசம் செய்ய முயற்சி செய்கிறார்கள்.

வீடியோவில், ஒரு பெண் மற்றொரு பெண்ணின் தலைமுடியைப் பிடித்து சாலையில் இழுத்துச் செல்வதைக் காணலாம்,

அந்த பெண் மேல் அமர்ந்து மீண்டும் மீண்டும் தலையில் அடிக்கிறார்.

இதற்கிடையில் அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஒரு பெண்ணை அலேக்காக தூக்கி தரையில் வீசுகிறார்.

அதே சமயம் இன்னொரு பக்கம் பெண்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

இறுதியாக பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்து பெண்களையும் கைது செய்கிறார்கள் இந்த வீடியோவை டுவிட்டரில் ஏற்கனவே 1.2 கோடி பேர் பார்த்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version