ஸ்ரீ என்ற துரதிஷ்டமான சொல்லின் காரணமாகவே, ‘சிலோன்’ என்பதிலிருந்து ‘ஸ்ரீலங்கா’ என பெயர் மாற்றம் பெற்றது முதல் கடந்த தசாப்தங்களாக நாடு முற்றிலும் அழிவை சந்தித்து வருவதாக விஞ்ஞான எழுத்தாளரும் வானியலாளருமான அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.
“எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் விஜய குமாரதுங்க ஆகியோரின் படுகொலையிலிருந்து, வங்குரோத்தான நிறுவனங்கள் வரை, ‘ஸ்ரீ’ என்ற வார்த்தை ஒரு பேரழிவு விளைவை ஏற்படுத்தியது.
இலங்கையின் கடைசி மன்னன் கூட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்று அழைக்கப்பட்டான் என்று அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு, தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரச நிறுவனங்களின் பெயர்களுக்கு முன்னால் ‘ஸ்ரீ’ என்ற சொல்லை பயன்படுத்துவது நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணமாகியுள்ளது.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்ததன் மூலம் 1956 ஆம் ஆண்டு முதல் எமது நாடு துரதிர்ஷ்டத்தைப் பெற்றிருந்தது.
அவர் வாகன இலக்கத் தகடுகளில் ஸ்ரீ என்ற சொல் அல்லது எழுத்தை சேர்த்ததன் பின்னர் நாட்டில் சிங்கள, தமிழ் சமூகங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தினார்.
இந்த மோதலின் போது, நாடு பெருமளவிலான உயிர் இழப்புகள் மற்றும் சொத்து சேதங்களை சந்தித்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் பின்னர் பிக்கு ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.
ஸ்ரீலங்கா ஷிப்பிங் கம்பனி லிமிடெட், ஸ்ரீலங்கா ரயில்வே (SLRD), மத்திய வங்கி மற்றும் போக்குவரத்து சபை (SLTB) போன்ற பல அரச நிறுவனங்கள் ஸ்ரீ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதால் அவை வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா என்று பெயரிடப்படுவதற்கு முன்னர் எமது நாடு லங்கா, சிங்களே, தம்பபன்னி, செரண்டிப், தப்ரபேன், சைலான், சிலோன், ஹெலதிவ, தஹம் திவயின, அல்லது லக்பிம என அழைக்கப்பட்டது. ஸ்ரீ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த வார்த்தையின் வீரியத்தை நான் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என்று பெரேரா கூறியுள்ளார்.
பிரித்தானிய டொமினியன் அந்தஸ்தை நீக்கி, 1972 இல் புதிய அரசியலமைப்புடன் குடியரசாக மாறிய பின்னர், இலங்கை தனது அரசியல் மற்றும் பொருளாதாரத்தை விஸ்தரிக்க ஆரம்பித்ததாக நம்பும் இலங்கையர்களின் குழு மத்தியில் ஒரு கருத்து உள்ளது, அது நாட்டின் பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றியது.
90 களின் முற்பகுதியில், ஜனாதிபதி பிரேமதாச ஆங்கில Sri என்பதற்கு பதிலாக Shri என்று மாற்றி இதை சரிசெய்ய முயன்றார்.
ஏனென்றால், ஜனாதிபதி பிரேமதாஸவிடம் இந்த பெயர் அரச தலைவருக்கு துரதிர்ஷ்டம் என்று ஒரு ஜோதிடர் கூறியதாக கூறப்படுகிறது.
எனவே அவர் நாட்டின் உத்தியோகபூர்வ பெயரை “SriLanka என்பதில் இருந்து “Shri Lanka” என்று அரசியலமைப்பு அதிகாரம் இல்லாமல் மாற்றினார்.
மாற்றப்பட்ட எழுத்துப்பிழை ஒரு நினைவு நாணயத்தில் மட்டுமே காணலாம். 1993 மே முதலாம் திகதி ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட பின்னர் விரைவில் எழுத்துப்பிழை மாற்றப்பட்டது.
ஜூன் 1992 மற்றும் டிசம்பர் 1993க்கு இடையில் வெளியிடப்பட்ட முத்திரைகளில் மட்டுமே Shri என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்று ஒரு அறிக்கை கூறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.