p>எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 100 ரூபாவினாலும் 5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 40 ரூபாவினாலும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 19 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

விலை திருத்தத்துக்கு அமைய 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 3,638 ரூபாவாகவும் 5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 1,462 ரூபாவாகவும் 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 681 ரூபாவா  கவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைக்கு அமைய சகல எரிவாயு விநியோகஸ்தர்களும் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என லிட்ரோ நிறுவனம் சகல விநியோகஸ்தர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

மாதாந்த எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய  கடந்த மாதம்  12.5 கி.கிராம் சிலிண்டரின் விலை 1,005 ரூபாவினாலும் 5 கி.கிராம் சிலிண்டரின் விலை 402 ரூபாவினாலும் 2.3 கி.கிராம் சிலிண்டரின் விலை 183 ரூபாவினாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version