♠ தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரம்யா.
♠ இவர் தனது நாயை தொலைத்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா.
இவர் தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி பின்னர் காங்கிரஸ் சார்பில் மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார்.
தற்போது அவர் அரசியலில் இருந்தும் ஒதுங்கி உள்ளார். இந்நிலையில் ரம்யா நாயை தொலைத்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் தொலைந்த தனது நாயை கண்டுபிடித்து தருமாறு அனைவரிடமும் கோரிக்கை வைத்து, கண்டுபிடித்து கொடுப்போருக்கு அரிய பரிசு காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.