♠ பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்களை குவித்தது.

♠ 16.4 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் 187 ரன்கள் எடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அசத்தலாக வெற்றிப்பெற்றது.

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, டூ பிளசிஸ் பொறுப்புடன் ஆடினர். அணியின் எண்ணிக்கை 82 ஆக இருக்கும்போது டூ பிளசிஸ் 45 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். விராட் கோலியுடன் லாம்ரோர் ஜோடி சேர்ந்தார்.

3வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில், விராட் கோலி 55 ரன்னில் வெளியேறினார். இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்களை குவித்தது.

லாம்ரோர் 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.

இதில் அதிகபட்சமாக பிலிப் சால்ட் 45 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

தொடர்ந்து, ரிலீ ரொசவ் 35 ரன்களும், மிட்சேல் மார்ஷ் 26 ரன்களும், டேவிட் வார்னர் 22 ரன்களும் அசார் பட்டேல் 8 ரன்களும் எடுத்தனர்.

ரிலீ ரொசவ் மற்றும் அசார் பட்டேல் ஆட்டத்தை இழக்காமல் ஆடினர். ஆட்டத்தின் முடிவில், 16.4 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் 187 ரன்கள் எடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அசத்தலாக வெற்றிப்பெற்றது.

 

Share.
Leave A Reply

Exit mobile version