புகைப்படப்பிடிப்பாளர்களால் (பப்பராஜிகளால் )துரத்தப்பட்ட  இளவரசர் ஹரிதம்பதியினர் பாரிய விபத்தொன்றில் சிக்கும் ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

நியுயோர்க்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஹரி மேகன் தம்பதியினர் விருதுவழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் அவர்களை புகைப்படப்பிடிப்பாளர்கள் பின்தொடர்ந்து துரத்தியுள்ளனர்.

தங்கள் வாகனம் இரண்டு மணிநேரம் துரத்தப்பட்டது என இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக வீதியில் காணப்பட்ட வாகனங்கள் பாதசாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் தங்கள் வாகனம் மோதுப்படும் நிலை உருவானது என இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

விருது வழங்கும் நிகழ்வில் ஹரிதம்பதியினருடன் மேகனின் தாயாரும் கலந்துகொண்டுள்ளார்.அவர்கள் அந்த நிகழ்விலிருந்து வெளியேறுவதை புகைப்படங்கள் காண்பித்துள்ளன.

இதன்பின்னர் ஆறிற்கும் மேற்பட்ட கார்கள் அவர்களின் வாகனத்தை துரத்தியுள்ளன கண்மூடித்தனமாக ஹரியின் வாகனத்தை அவர்கள் பின்தொடர்ந்துள்ளனர் – ஆங்கில படப்பாணியில் ஹரியின் வாகனம் துரத்தப்பட்டுள்ளது- பப்பராசிகள் வாகனத்தை துரத்தியவாறு ஹரிதம்பதியினரை படம்பிடித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version