அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்க வந்தார். அவரை பேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தனர். உடனே பேச எழுந்த பைடன் கால் இடறி கீழே விழுந்தார்.
உடனே அருகிலிருந்த விமானப்படை வீரர்கள் அவரை கைத்தாங்கலாக தூக்கினர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்பின், அதிகாரிகளின் உதவி ஏதுமின்றி, அவர் நடந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்தார். இந்த சம்பவத்தில் அவருக்கு காயம் ஏற்படவில்லை. நலமாக உள்ளார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
விழா மேடையில் போடப்பட்டிருந்த மணல் மூட்டை ஒன்றை மிதித்தபோது கால் தடுமாறி ஜனாதிபதி ஜோ பைடன் கீழே விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
விழாவில் அதிபர் ஜோ பைடன் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டமளித்ததுடன், கைகுலுக்கி பாராட்டும் தெரிவித்தார்.