மெக்சிக்கோவின் மேற்குப்பகுதியில் உள்ள நகரமொன்றில் அதிகாரிகள் மனித எச்சங்கள்அடங்கிய 45 பைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கடந்தவாரம் காணாமல்போன இளைஞர்கள் சிலரை தேடிச்சென்றவேளை குவாடலஜரா என்ற நகரில் மனித எச்சங்கள் அடங்கிய 45பைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

ஆண்களினதும் பெண்களினதும் உடல்கள் காணப்படுகின்றன – இன்னமும் எத்தனை உடல்கள் காணப்படுகின்றன என்பது தெரியவில்லை .

மனித எச்சங்கள் நிலப்பகுதி மிகவும் சவாலான ஒன்று என்பதாலும் போதிய வெளிச்சம் இன்மையாலும் தேடுதல் நடவடிக்கைகள் பல நாட்கள் தொடரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏழுபேர் காணாமல்போனமை குறித்த தகவல்களை தொடர்ந்து தேடுதல்களை ஆரம்பித்தவேளை இந்த மனித எச்சங்கள்மீட்கப்பட்டன என தெரிவித்துள்ள அரசாங்க அதிகாரிகள் பள்ளத்தாக்கில் தேடுதல்களை மேற்கொண்டவேளை மனித எச்சங்களை மீட்டதாக தெரிவித்துள்ளனர்.

மெக்சிக்கோவில் காணாமல்போதல் என்பது நாளாந்தம் இடம்பெறும் விடயமாக மாறியுள்ளது.

ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளனர் என அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன,பலர்திட்டமிட்ட குற்றச்செயல் கும்பல்களிற்கே பலியாகியுள்ளனர்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.

மெக்சிக்கோ ஜனாதிபதி பெலிப்கால்ட்டிரோன் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை 2007 இல் ஆரம்பித்த பின்னரே காணாமல்போதல் அதிகரித்துள்ளது.

ஆண்களே அதிகளவு காணாமல்போயுள்ளனர் இவர்களில் அனேகமானவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள்.

காணாமல்போனவர்களின் உறவினர்கள் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version