களுத்துறை சிறைச்சாலையில் கைதியாகவுள்ள மகனுக்கு போதைப்பொருள் கொண்டு வந்த தாயொருவர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண் களுத்துறை – விலேகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது மகனைப் பார்ப்பதற்காக குறித்த தாய் காற்சட்டையொன்றை எடுத்துவந்துள்ளார்.

இந்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் அதனை சோதனையிட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version