பிக் பாஸ் சீசன் 7 இன்னும் ஒரு மாதத்தில் ஆரம்பம்; கமல்ஹாசனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசனை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிப்பரப்பாக உள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சியாக உள்ள பிக்பாஸ் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியில் இந்நிகழ்ச்சியை சல்மான் கானும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், மலையாளத்தில் மோகன்லாலும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
தமிழில் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் இதுவரை 6 பிக்பாஸ் சீசன்கள் முடிவடைந்துள்ளது.
இதில் முறையே ஆரவ், ரித்விகா, முகேன் ராவ், ஆரி, ராஜு மற்றும் அசீம் ஆகியோர் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
இந்த நிலையில், தான் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூலை மாதத்தில் தொடங்கப்பட உள்ளது.
இதனால் பிக்பாஸ் சீசன் 7 தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இதனையடுத்து, பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்தநிலையில், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள கமல்ஹாசனின் சம்பள விவரம் தெரியவந்துள்ளது.
கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.75 கோடி சம்பளம் வாங்கிய கமல்ஹாசன், தற்போது 7வது சீசனை தொகுத்து வழங்க ரூ.130 கோடி சம்பளம் பேசி உள்ளதாகக் கூறப்படுகிறது.
முதலில் ரூ.100 கோடி சம்பளம் தருவதாக பிக்பாஸ் குழு கேட்ட நிலையில், அதனை ஏற்க மறுத்த கமல்ஹாசன் ரூ.130 கோடி சம்பளத்திற்கு ஓ.கே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.